தருமபுரி மாவட்ட அளவில் அமெச்சூர் சிலம்பம் சங்க சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் அரூர் வெற்றிவேல் சிலம்பு பயிற்சி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆறு பேர் தங்கம், மூன்று பேர் சில்வர், மூன்று பேர் வெங்கலம் பதக்கங்கள் வென்றனர். ஆறு வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் சான்றிதழ் வழங்கப்பட்டது .இதில் மாஸ்டர் சுரேஷ் பயிற்சியாளர் அஜிபா சிறப்பு அழைப்பாளர்களாக அரூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமானுல்லா பேரூராட்சி கவுன்சிலர் பெருமாள் மற்றும் செந்தில் தாஜுதீன், நாகராஜ் ராஜாராம், சதாம் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
