நேற்று தன் பெற்றோரிடம் வேலைக்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்றதாக கூறப்படுகிறது, இன்று காலை தொங்கனூர் ரயில் நிலையம் அருகே காலை 7:30 மணியளவில் சுகு என்று ஜல்லி கற்களால் எழுதிவிட்டு அருகே தன்னுடைய ஐடிஐ அடையாள அட்டை வைத்து விட்டு சேலம்-சென்னை இருப்புப் பாதையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அங்கு இருந்த நபர்கள் சிந்தல்பாடி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பின்னர் ரயில்வே போலீசாருக்கும் மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றினர், இது குறித்து உறவினர் மற்றும் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
பின்னர் சுகுவானனின் உடல் பிரயோத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது, ஐடிஐ மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தகவலால் அப்பகுதியில் சோகம் நிலவியது
