தருமபுரி மாவட்ட அன்னை தெரசா பேரவை சார்பில் அன்னை தெரசா அவர்களின் 25ம் ஆண்டு நினைவு அஞ்சலியானது தருமபுரி இராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் அனுசரிக்கப்பட்டது.
இதில் தருமபுரி மேற்கு மாவட்டத்தின் அன்னை தெரசா பேரவை சார்பில் தலைவர் மில் நாகராஜ், பொது செயலர் தம்பி பரமேஷ்வரன், செயலர் முத்துவடிவேல் , பொருளர் பிறைசூடன், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் சிங்கராயன், சாம்பசிவம், பெருமாள் சேட்டு, கோவிந்தராஜ், ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
