தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் பிரிவில் சரக அளவிலான தடகள போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியினை பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பேகார அள்ளி, திருமல்வாடி, கொலசனஅள்ளி உள்ளிட்ட 48 பள்ளிகளை சேர்ந்த 540 மாணவிகள் கலந்து கொண்டு போட்டியில் பங்கு பெற்றனர்.
தட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 முதல் 600 மீட்டர் வரையிலான ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைப்பெற்றன. இப்போட்டியின் நடுவராக உடற்கல்வி இயக்குநர் நாகராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், ரங்கநாதன், வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
