தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த செல்லம்பட்டி ஊராட்சி சங்கிலிவாடி கிராமத்தில் அடிப்படை கோரிக்கைகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எண்ணற்ற பல போராட்டங்களை நடத்தி சுடுகாடு, குடிநீர் வசதி, சாலை,தெரு விளக்கு,கால்வாய்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி உள்ளது. அப்படி இருந்தும் சங்கிலிவாடி கிராமத்திற்கு தற்போது ஒகேனக்கல் குடிநீர் வசதிதவிர மாற்று எந்த ஏற்பாடும் இல்லை, பைப் லைன் பழுது ஏற்பட்டால் வார கணக்கில் ஊர் பொதுமக்கள் குடிநீர் மற்றும் பொது பயன்பாட்டிற்கு தண்ணீர் இன்றி தினந்தோறும் பல்வேறு இடங்களுக்கு பல மணி நேரம் செலவழித்து அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை எனவே சங்கிலிவாடி கிராமத்தில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீலமேகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ குமார், ஒன்றிய செயலாளர் பி குமார், ஒன்றிய குழு ஏழுமலை நேரு, மாது தனலட்சுமி, பழனி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரபத்திரன் இதில் 100-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
