மாரண்டஅள்ளி பேரூர் கழக இளைஞரணி சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சியை தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் இன்ப சேகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் இளைஞர்களிடையே திராவிட மாடல் அரசின் நோக்கத்தை எடுத்துரைக்கும் நோக்கிலும், திராவிட கொள்கைகளை விளக்கும் நோக்கிலும் ஆங்காங்கே இளைஞர்களிடையே ஓர் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறார் திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி அவர்கள் இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஊரிலும் உள்ள கிளை கழகங்களில் வசிக்கும் இளைஞர்களை வீட்டிற்கே நேரில் சென்று திராவிடக் கொள்கைகளை எடுத்துரைத்து தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும் வகையில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் இன்பசேகரன் அவர்கள் தலைமையில் மாரண்டஅள்ளி பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் யதிந்தர் அவர்கள் மாரண்ட அள்ளியில் உள்ள 15 வார்டுகளிலும் வசிக்கும் இளைஞர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியில் உறுப்பினராக சேர்க்கும் பணியை செயல்படுத்தி வருகிறார் இந்நிகழ்ச்சியை இளைஞர் அணியின் உறுப்பினர் படிவங்களை கொடுத்து மாவட்டச் செயலாளர் இன்பசேகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன்,ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜா,மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி துணை அமைப்பாளர் இராஜபார்ட் ரங்கதுரை,மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், பன்னீர்செல்வம் மல்லாபுரம் தர்மன், கிளைச் செயலாளர் காந்தி, உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
