அசைவ உணவகங்களில் ஆய்வு செய்ததில் இரண்டு உணவகங்களிலிருந்து முறையே மைதாவினால் பிசைந்து சுகாதாரமற்ற நிலையில் வைத்திருந்த 10 கிலோ பரோட்டா மாவினை பறிமுதல் செய்து அழித்தனர், மேலும் திறந்த நிலையில் முறையற்று வைக்கப்பட்டிருந்த மைதா 8 கிலோவையும் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.
மெயின் ரோட்டில் உள்ள உணவகத்தில் செயற்கை நிறமேற்றி மசாலா தடவி வைத்திருந்த 4 கிலோ இறைச்சியினை பறிமுதல் செய்து அழித்தனர், சில உணவகங்களில் நெகிழிகள், செயற்கை நிறமேற்றி பவுடர் டப்பாக்களை பறிமுதல் செய்து கொட்டி அழித்தனர்.
உணவகங்களில் இறைச்சி புதியதாகவும் முறையாக பராமரிக்கவும், உணவு தயாரிக்க உபயோகிக்கும் மூலப்பொருள்கள் தரமானதாகவும் பயன்படுத்தும் நீர் மற்றும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நீரானதாக இருக்க வேண்டுமெனவும் மழைக்காலம் என்பதால் பருக வெந்நீர் தரவேண்டுமென அறிவுறுத்தினார்.. மேலும் சமையல் எண்ணெய் ஒரிருமுறைக்கு மேல் பயன்படுத்ததாகவும் செயற்கை நிறமேற்றிகள் அறவே தவிர்த்திடவும் பார்வையிட்டு ஆய்வு செய்து விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
உணவு வணிகத்தினர் உணவு பாதுகாப்பு விதிகளை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும் ஒரு முறை பயன்படுத்தி எறியப்படும் நெகிழி கண்டிப்பாக தவிர்க்கவும், அனைத்து உணவு சார்ந்த வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றுருத்தலுடன் முறையாக புதுப்பித்து வணிகம் புரியவும் விழிப்புணர்வு செய்தனர்.
இது போன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் என மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் .பானு சுஜாதா தெரிவித்தார்.