மேய்ச்சலில் இருந்த போது திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து 3 அடி தண்ணீர் 15 அடியாக உயர்ந்தது. இதனால் வெளியே வர முடியாமல் செய்வதறியாது திகைத்தவர்கள் பாலக்கோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் மற்றும் போலீசார் 30 அடி நீளமுள்ள ஆற்றின் கரையின் இருபுறம் கயிறு கட்டி குமார் என்பவரை மீட்டனர்.
மற்ற மூவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதாலும் இரவு நேரமாகிவிட்டதால் இன்று அதிகாலை முதல் அவர்களைமீட்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
மீட்பு பணியினை பார்வையிட்ட சார் ஆட்சியர் சித்ரா விஜயன் கூடுதலாக தர்மபுரி தீயணைப்பு துறையினர் இனைந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிட்டார் அனை தொடர்ந்து தர்மபுரி தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து சுமார் 48 மணி நேரத்திற்க்கு பிறகு மற்ற 3 நபர்களையும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து இரு கரையிலும் கயிறு கட்டி கயிற்றின் மூலம் பாதுகாப்பாக மீட்டனர்.
