தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஆதரவற்று இருப்பதாக காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ரங்கசாமி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்கள் மை தருமபுரி அமைப்பை தொடர்பு கொண்டார்.
மை தருமபுரி அமைப்பின் சார்பாக திரு.தமிழ்செல்வன், அருணாச்சலம், சசி தமிழரசன் மற்றும் யோகேஷ் ஆகியோர் அதியமான் கோட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.வடிவேல் அய்யா அவர்களுடன் இணைந்து உடலை நல்லடக்கம் செய்தனர்.
மை தருமபுரி அமைப்பின் சார்பாக ஏற்கனவே தருமபுரி நகர காவல் நிலையத்துடன் இணைந்து ஒன்பது ஆதரவற்றவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பத்து ஆதரவற்ற உடல்களை தங்கள் குடும்ப உறவாக எண்ணி நல்லடக்கம் செய்துள்ளனர். ஆதரவற்ற உடல்கள், ஏழ்மையில் இறந்தோர் ஆகியோரது உடல்களை நல்லடக்கம் செய்ய மை தருமபுரி அமைப்பினர் உதவி செய்து வருகின்றனர்.
