பாலக்கோடு அருகே கூலன் கொட்டாய் கிராமத்தில் நேற்றிரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி 20 வயது கொண்ட இரண்டு ஆண் யானைகள் ஒரு பெண் யானை என மொத்தம் 3 காட்டு யானைகள், சின்னபாப்பன், முனிராஜ், திம்மராஜ், சின்னராஜ் ஆகியோரது நெல், வாழை, மா தோட்டத்திற்க்குள் நுழைந்து மாமரத்தை சாய்த்தும், வாழை, நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது.
யானையின் பிளிறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அப்பகுயில் முகாமிட்டுள்ள யானைகளை அருகில் உள்ள போலுமலை காப்புக் காட்டிற்க்கு 3 காட்டு யானைகளும் விரட்டினர்.
இது குறித்து கூறிய அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் அடிக்கடி யானைகள் இரவு நேரத்தில் கிராமத்தில் புகுந்து விவசாய பயிர்களையும், மாந்தோட்டங்களையும் அழித்து வருவதாகவும், அரசாங்கம் தரும் நஷ்டஈடு போதுமானதாக இல்லை எனவும் மேலும் இக்கிராமத்தில் இதுவரை எங்குமே தெருவிளக்கு அமைக்கப்படாமல் கிராமமே இருளில் மூழ்கி உள்ளதால் தான் யானை அடிக்கடி ஊருக்குள் வருவதாகவும், யானைக்கு பயந்து உடல் உபாதைகளை கழிக்க கூட வெளியே வர பயப்படுகின்றனர்.
எனவே எங்கள் கிராமத்திற்க்கு தெருவிளக்கு அமைத்து தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
