தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக பெரியார் பல்கலைக்கழக 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு 'பெரியாரை வாசிப்போம்' கருத்துருவில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இதில் தர்மபுரி பி எஸ் என் எல் கோட்ட மேலாளரும் (ஓய்வு), தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினருமான திரு ஊமை. ஜெயராமன் அவர்கள் 'பெரியார் காண விரும்பிய உலகம்' என்ற தலைப்பிலும்
திரு. யாழ் திலீபன் 'பெரியாரும் மாணவர்களும்' என்ற தலைப்பிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
முன்னதாக நிகழ்வின் தொடர் நிகழ்வாக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.
ஆங்கிலத்துறை இணை பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் சி கோவிந்தராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியாக முதுநிலை இரண்டாம் ஆண்டு புவியமைப்பியல் மாணவி. செல்வி. திவ்யதர்ஷினி நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வை முதுநிலை இரண்டாம் ஆண்டு உயிர் தொழில்நுட்பவியல் மாணவன் தினேஷ் குமார் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதுநிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர்கள் பெருமாள், நந்தகுமார், பழனிசாமி, ஹரிகுமார், நிர்மலா, கல்பனா மற்றும் ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.
