ஏரியூர் அருகே உள்ள காமராஜா பேட்டை கணபதி ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த கூட ஊர்வலம்.
ஏரியூர் அருகே உள்ள காமராஜர் பேட்டையில் எழுந்தருளி உள்ள பழமையான ஸ்ரீ ஜல கமல கணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற திங்கட்கிழமை (12.09.2022) அன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மேளதாளம் வழங்க வானவேடிக்கையுடன் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காவிரி ஆற்றில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் தீர்த்த குடம் எடுத்து நடந்து வந்தனர்.
நாளை ஆறு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ ஜல கமல கணபதி திருக்கோவில் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
