இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்கள் கூறும் போது இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் அனைவரும் வேளாண் கருவிகளைக் கொண்டு விவசாய பணிகளை மேற்கொண்டால் விவசாய பணிகள் குறுகிய காலத்தில் நிறைவடையும். மேலும் உற்பத்தி செலவு குறைவதுடன் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்று கூறினார்கள்.
மேலும் குறிப்பாக நெல் சாகுபடி செய்யும் பொழுது நேரடி நெல் விதைப்பு இயந்திரத்தை பயன்படுத்தி நெல் விதைப்பு செய்தால் விவசாயிகளுக்கு நாற்றங்கால் உற்பத்தி செலவு மற்றும் நாற்று நடவு செலவு குறையும் மேலும் இந்த முறையில் விவசாயிகள் நெல் விதைப்பு செய்யும்போது நெல் பயிர்கள் வரிசையாக வருவதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைகிறது மகசூல் அதிகரிக்கிறது என்று கூறினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அரூர் வேளாண்மை உதவி இயக்குனர் திரு.குமார் அவர்கள் கலந்து கொண்டு வேளாண் துறையில் உள்ள மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு.ரமேஷ் மற்றும் அட்மா திட்டம் வட்டார தொழில் நுட்ப மேலாளர் திரு. செந்தில் குமார் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு கள அலுவலர் திரு.வெங்கடேஷ் மற்றும் தகடூர் உழவர் களஞ்சியம் திரு.தயாநிதி உட்பட 15 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
