தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது, இதில் தர்மபுரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் திருS.P. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் நல்லம்பள்ளி ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி பெரியசாமி, ஊர் நாட்டாமை உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ் குமார்ஸ் கவுன்சிலர் புனிதம் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் திரு வெங்கடேஸ்வரன் அவர்களிடம் பெண்களுக்கான புதிய கழிவறை கட்டித் தருமாறு தலைமை ஆசிரியர் ராஜசேகர் கோரிக்கை வைத்தார், கோரிக்கையை ஏற்று உடனடியாக கட்டித் தருவதாக கூறினார்.
