தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி மற்றும் தர்மபுரி பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல் ஆகியோர் பாலக்கோடு பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் சுற்றுலா வாகனத்தை தணிக்கை செய்த போது உரிய அனுமதியின்றி இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது, அதே போன்று உரிய அனுமதியின்றி தனியார் பேருந்தில் கம்பெனி பணியாளர்களை அழைத்து வந்த மற்றொரு வாகனம் உட்பட 2 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்க தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
