தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை பேரூராட்சியில் உள்ள 3 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அபிராமி காந்தி, வெங்கடேசன, கீதாவடிவேலு, தலைமையாசிரியர்கள் ஆரோக்கியசாமி, தயபுனிசா, மகேஸ்வரி, சமுதாய அமைப்பாளர் லாவண்யா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள் சங்கீதா, செல்வி மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
