ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தன்னார்வல இளைஞர்கள் ஒன்றிணைந்து YEA (Youth Employer Association) என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் மூலம், ரத்ததானம் வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், மற்றும் பசுமையை பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நட்பு பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஏரியூர் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் தர்மபுரி மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியுடன் இணைந்து ஏரியூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் 50க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர். மூன்றாவது முறையாக இந்த அமைப்பு ரத்ததான முகாம் நடத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 350க்கு மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கியுள்ளனர்.
இந்த ரத்ததான முகமை பென்னாகரம் வட்ட மருத்துவக் அலுவலர் ஜெயச்சந்திர பாபு தொடங்கி வைத்தார். மேலும் ஏரியூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலாஜி, மருத்துவர் ராமதாஸ் ,மருத்துவர் ஞானகுமரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர், ஏரியூர் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் ரத்த தானங்களை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை, யூத் எம்ப்ளாயர் அசோசியேஷனின் தலைவர் பாபு மற்றும் செயலாளர் கணபதி, கோகுல், சதீஷ், பாலாஜி, தமிழ், கலையரசன், கோவிந்த ஐயர் உள்ளிட்டவர்கள் மேற்கொண்டனர்.
ரத்த தானம் வழங்கியவர்களை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை ஆர்வலர் முத்துக்குமார், ரத்ததானம் வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
