அவர்கள் போக்குவரத்து சேவை துறை (பயணிகள் அல்லது பொருட்களை கொண்டு செல்வதற்கான அஞ்சல், தந்தி அல்லது தொலைபேசி சேவை துறை, மின்சாரம். ஒளி மற்றும் நீர் சாலை மற்றும் போக்குவரத்து துறை), வழங்கல் சம்மந்தமான துறை, பொது பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, மருத்துவமனை மற்றும் மருந்தகத் துறை, காப்பீட்டுத்துறை, கல்வி மற்றும் கல்வி / சார்ந்த நிறுவனங்கள். வீடு மனை மற்றும் நிலம் சார்ந்த துறை போன்ற பொது பயன்பாட்டு சேவை துறைகளில் பணிபுரிந்தஅனுபவம் உள்ள 62 வயதிற்குட்பட்ட தகுதியும் அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விணணப்பங்களை பூர்த்தி செய்து தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம். என்ற முகவரிக்கு 15.09.2022ம் தேதி மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பும்படி சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பான விவரங்களை https://districts.ecourts.gov.in/dlsadharmapuri என்ற இணையத்தில் அறியவும்.
