ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் நாள் தொடங்கி செப்டம்பர் மாதம் முழுவதும் ஒரு மாத காலத்திற்கு தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு, அந்த வகையில், இந்த ஆண்டு ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தேசிய ஊட்டச்சத்து மாதத்திருவிழா - 2022 செப்டம்பர் திங்களில் ஒருமாதத்திற்கு கொண்டாடப்படுகின்றது.
இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தேசிய ஊட்டச்சத்து மாதத்திருவிழா 2022 தொடக்க விழா நிகழ்ச்சி இன்று (02.00.2022) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சி.சாந்தி இஆப. அவர்கள் தலைமையேற்று ஊட்டச்சத்து உறுதிமொழியான - இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல் நிலையை அடைய நான் உறுதிமொழி ஏற்கிறேன். தேசிய ஊட்டச்சத்து மாதத்தில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதை நான் உறுதி செய்வேன். ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான உணவு, தூய்மையான குடிநீர். சுகாதாரம், சரியான தாய்மை, பச்சினம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு ஊட்டும் பழக்க வழக்கங்களில் உள்ளது. தேசிய ஊட்டச்சத்து இயக்கமானது நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாறு. ஒவ்வொரு வீடு. ஒவ்வொரு பள்ளி. ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு நகரமும் ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் நலவாழ்வு சம்பந்தமான கருத்துக்களை அறிய நான் உதவுவேன், இந்த மக்கள் பேரியக்கத்தின் மூலம் எனது நாட்டிலுள்ள எனது சகோதர். சகோதரிகள், மற்றும் குழந்தைகள் சிறந்த ஆரோக்கியமானவர்களாகவும். திறமையானவர்களாகவும் உருவெடுப்பர். இது என் உறுதிமொழி, ஆரோக்கியமான மக்களால் ஆனது வலிமையான தேசமாகும்.- என்ற உறுதிமொழியினை வாசிக்க மாவட்ட ஆட்சியரக அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் உதவி திட்ட அலுவலர்கள். மற்றும் பணியாளர்கள் அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்
மேலும், போஷன் அபியான்- ஊட்டச்சத்து மாத திருவிழா - 2022 முன்னிட்டு, ஊட்டச்சத்து மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்கள், இதனை தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்திகழ்ச்சியில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் திருமதி.ஜான்சிராணி உட்பட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் உதவி திட்ட அலுவலர்கள். பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
