தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெல்மாரம் பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்தி வீட்டு மாரியம்மன், ஸ்ரீ பெரியாண்டவர், ஸ்ரீ பெரியாண்டிச்சி, ஸ்ரீ பத்ரகாளி, ஸ்ரீ விநாயகர் ஆகிய ஆலயங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது.
இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏராளமான பொதுமக்கள் தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர், பால்குட ஊர்வலம், பன்னீர் குட ஊர்வலம் மற்றும் முளைப்பாளிகை ஊர்வலம் எடுத்து வந்தனர்.
தொடர்ந்து நேற்று இரவு, மற்றும் இன்று காலையும் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது, அதனைத் தொடர்ந்து இன்று காலை 6:00 மணி முதல் 7.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா இனிதே நடந்தது, இந்த கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீ ராமானந்த சுவாமிகள் முன்னிலையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேகத்தை ஊர் முக்கியஸ்தர்களான குருசாமி மாதப்பன் ஊர் கவுண்டர் அவர்களும் மாதம்மாள் மற்றும் முனியப்பன் நிகிதா ஸ்ரீ விக்னேஷ் கீதா ஆகியோர் முன் நின்று நடத்தி வைத்தனர்.
