Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் ஒரு ஆசிரியை உட்பட 8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு.

கோப்பு படம்.
தமிழகத்தில் நிகழ்கல்வியாண்டில் ( 2021-2022 ) மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள 385 ஆசிரியர்களின் பட்டியல் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப் .5- ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தினவிழாவாக கொண்டாடப்பட்டு அந்த விழாவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருதுடன் ரூ .10 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.

அந்த வகையில் நிகழ்கல்வியாண்டுக்கான தருமபுரி மாவட்டத்தின் சிறந்த ஆசிரியர்களாக 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  1. திரு. அ.சு.மணி - தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மாமரத்துப்பள்ளம், பென்னாகரம்.
  2. திரு. இரா. சென்ன கிருஷ்ணன் -தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நல்லகுட்ல அள்ளி, மொரப்பூர் ஒன்றியம்.
  3. முனைவர் ஜ. மணி - முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி.
  4. திரு. சி. தனசேகரன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நல்லம்பள்ளி, நல்லம்பள்ளி ஒன்றியம்.
  5. திரு.சி.கிருஷ்ணன் - தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, பாளையம்புதூர்.
  6. திரு. இரா. செந்தில், - தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, கே.நடுஹள்ளி, தருமபுரி.
  7. திரு.க.அங்கப்பன் - தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, பத்திரெட்டிஅள்ளி, தருமபுரி.
  8. திருமதி க.மாலாதலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஓமல்நத்தம், நல்லம்பள்ளி.
இந்தப் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இவற்றில் 385 ஆசிரியர்களில் 5 ஆசிரியர்களுக்கு மட்டும் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கவுள்ளார், எஞ்சிய ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஓரிரு நாள்களில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியது : இதுவரை இல்லாத அளவுக்கு நிகழாண்டு இளைய தலைமுறை ஆசிரியர்கள் அதிகளவில் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். புதுமையான கற்பித்தல், கல்விக்கான செயலிகள் வடிவமைத்தல், பள்ளிகளில் சுற்றுச் சூழலை மேம்படுத்துதல், மாணவர் சேர்க்கையை உயர்த்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies