பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் கலந்து கொண்டு விளையாடினர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்பணி பால் பெனடிக்ட் சே ச அவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
வளையபந்து (TENNIKOIT) போட்டியில் மாணவிகளுக்கான இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் பிரிவில் தனிநபர் பிரிவு, இரட்டையர் பிரிவு ஆகிய அனைத்து விதமான நிலைகளிலும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அரூர் சரக அளவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அவ்வாறே வளையபந்து (Tennikoit) போட்டியில் மாணவர்களுக்கான இளையோர், மூத்தோர் தனிநபர் பிரிவிலும் இரட்டையர் பிரிவிலும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அரூர் சரக அளவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மாணவிகளுக்கான கையுந்து பந்து (Volleyball) போட்டியில் மூத்தோர் மற்றும் இளையோர் பிரிவில் அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அரூர் சரக அளவில் இரண்டாம் இடம் பெற்று சிறந்தனர்.
சிறப்பான வெற்றிக்கு உழைத்த உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. விக்டர் சுந்தர்ராஜ் மற்றும் திரு. ஜான்பால் ஆகியோரையும், வெற்றிபெற்ற மாணவ மாணவிகளையும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
02.09.2022 அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரூர் சரக அளவிலான மூத்தோர் பிரிவிற்கான கால்பந்து போட்டியிலும் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
