தருமபுரி மாவட்டம் அரூர் வேப்பம்பட்டி கிராமத்தில் வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் தேனீ வளர்ப்பு செயல் விளக்கம் துணை வேளாண்மை அலுவலர் திரு கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயன்கள் மற்றும் வேளாண்மை துறை திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி அலுவலர் திரு தண்டாயுதம் அவர்கள் கலந்து கொண்டு தேனீ வளர்ப்பின் போது விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
தேனீ வளர்ப்பு முன்னோடி விவசாயி திரு கார்த்தி அவர்கள் கலந்து கொண்டு தேனீக்கள் அவற்றின் வாழ்க்கை முறை பற்றியும் தேனி வளர்ப்பு முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் . இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு.செந்தில்குமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு.திருப்பதி மற்றும் 15க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
