இதில் 11, 14, 17வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் 19 வயதுக்கு மேற்பட்ட அணியில் தமிழ்நாடு சிறப்பாக விளையாடி தங்க பதக்கம் வென்றது. மேலும் ஒட்டுமொத்த ஷேம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது.
இந்நிகழ்ச்சியை ஒளரங்காபாத் செயலாளர் திரு.லவ் குமார் மற்றும் தமிழ்நாடு செயலாளர் திரு.பூஞ்சோலை ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். இவர்களில் தமிழ்நாடு சார்பாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் பள்ளி, விஜய் வித்யாஷரம் மற்றும் டான் சிக்சாலயா மாணவர்கள் K.அஸ்வத், தர்ஷன், P.விஜய் வர்ஷன், C.நேஷந்த், S.K.தேஜஸ் ஆகாஸ், நர்வின் ராஜ், உமேஷ், ரகுராம், தர்ஷன், R.தியோப்லஸ், தன்வந்திரி பிரபு ஆகிய பள்ளி மாணவர்கள் 11/14/17 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடி தங்க பதக்கம் வென்றனர்.
மேலும் 19 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் முகமது அப்ரித், ஷந்துரு, தட்சிணாமூர்த்தி, ஓம் உலகநாதன், கௌதம், ரக்சன், பிரமோத் ஆகியோர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தருமபுரி மாவட்ட செயலாளர் திரு. சந்திரமோகன் மற்றும் கோச் முகம்மது அப்ரித் , ஷந்துரு ஆகியோர் பாராட்டினர்.
மேலும் இவர்களில் சிறப்பாக விளையாடிய மாணவர்கள் அடுத்த மாதம் ஸ்வீடனில் நடைபெற உள்ள சர்வதேச விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாட தேர்வாகி உள்ளனர். மேலும் இவர்களை நிறைய சாதனைகள் படைக்க வேண்டுமென பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
