தர்மபுரி அரசு மருத்துவமனை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவிகள் மற்றும் மணவார்கள் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மருத்துவக் கல்லூரி முதல்வர் டீன் அமுதவல்லியிடம் சென்று பேராசிரியர் சதீஷ் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததாக புகார் மனு ஒன்றை அளிக்கிறார்.
இந்த புகாரினை உடனடியாக விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் தருமபுரி மாவட்ட மருத்துவ கல்லூரி டீன் அமுதவல்லி, பெறுத்திருந்த இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேராசிரியர் சதீஷ்குமார் மாணவிகளிடம் எல்லை மீறி தவறான நோக்கத்தோடு நடந்து கொள்வதால், நாங்கள் அனைவரும் அவரின் வகுப்புகளை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்தனர், உடனடியாக இந்த மாதம் 3மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார் மருத்துவ கல்லூரி டீன் அமுதவல்லி.

இது குறித்த புகார்கள் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களின் கவனத்திற்கு சென்றதால் அமைச்சர் அவர்கள் உடனடியாக தருமபுரி மருத்துவ கல்லூரி டீன் அமுதவள்ளியிடம், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சதீஸ்குமாரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
