இதில் இறந்தவர் இண்டூர் அருகே சோம்பட்டியை சேர்ந்த மணி, 30 வயது என அவர் அதே பகுதியில் டெம்போ டிரைவாக இருந்து வந்துள்ளார். அவருக்கு அம்சவள்ளி என்கிற மனைவியும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் ஏரியூர் இன்ஸ்பெக்டர் யுவராஜன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இறந்து போன மணியின் மனைவி, மாமியார் உள்ளிட்ட ஐந்து பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மணியின் மனைவி அம்சவள்ளியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தததில், அம்சவள்ளி, தனது கல்லூரி காதலன் மூலம், கணவனை பெட்ரோல் ஊற்றி, எரித்து கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அம்சவள்ளி யின் கல்லூரி காதலனை தேடி, தனிப்படை காவல்துறையினர் பெங்களூரு சென்று அங்கு பேப்பர் கடை வைத்திருந்த, பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்த, சந்தோஷ், 27 வயது என்பவரை கைது செய்து பெரும்பாலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த அதே ஊரை சேர்ந்த லோகேஷ் 23 மணியின் மனைவி அம்சவள்ளி உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணை செய்ததில், அம்சவள்ளிக்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்து வந்ததுள்ளனர். இதனை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொலை நடந்த அன்று காலையிலிருந்து, அம்சவள்ளி தன் கணவருக்கு பணம் கொடுத்து, குடிக்க சொல்லி உள்ளார். மணி தொடர்ந்து மாலை வரை குடித்துள்ளார். பிறகு மாலை உனது நண்பர் சந்தோஷ் அழைக்கிறார் சென்று வா என்று என மனைவி அனுப்பி வைத்துள்ளார்.
சந்தோஷ் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்று சென்றதால் மணிவுடன் நட்பாகியுள்ளார். நண்பர் அழைத்ததன் பேரில் சந்தோஷ்யை தேடி சென்றுள்ளார். மீண்டும் சந்தோஷுடன் இணைந்து மணி குடித்துள்ளார், அதனை தொடர்ந்து முழு போதையில் அசைவற்று கிடந்த மணியை, சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோர், இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து பெரும்பாலை அருகே உள்ள நரசிபுரம் சுடுகாட்டிற்கு சுமார் 25 கிலோமீட்டர் தூரம் கூட்டி வந்து கை கால்களை கட்டி போட்டு, முகத்தை துணியால் கட்டி நள்ளிரவு 12 மணிக்கு கழுத்தில் மிதித்தும், மார்பு பகுதியில் எட்டி உதைத்தும் கொலை செய்துள்ளனர்.
பிறகு அடையாளம் தெரியாமல் இருக்க கொலை செய்த மணியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு பெங்களூருவிற்கு தப்பி சென்றுள்ளனர், இதனையடுத்து மணியின் மனைவி அம்மசவள்ளி, கள்ளகாதலன் சந்தோஷ்,லோகேஷ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை மனைவி கள்ளக்காதலனை வைத்து கொலை செய்யத சம்பவம் பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திது.
