கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் ஆகிய இரு அணையிலும் அதனுடைய முழு கொள்ளளவை எட்டியது இதனால் கர்நாடக அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆனது அதிகப்படியாக வெளியேற்றப்பட்டது இது மட்டுமில்லாமல் தமிழக காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவிகளில் குறிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் தமிழகத்தில் காவிரி கரையோரங்களிலும் மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லிற்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.
இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி 31 ஆயிரம் கன அடியாக உள்ளது இந்த நீர் வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக நீக்கப்பட்டு இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் மெயின் அருவிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களால் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.
