தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பஸ் நிலையத்தில் திமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பிஎன்பி இன்பசேகரன் தலைமை தாங்கி பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் காளியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஏரியூர் ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், பென்னாகரம் ஒன்றிய கழக செயலாளர் மடம். முருகேசன், பேரூர் கழக செயலாளர் வீரமணி, மாவட்ட பிரதி சிவக்குமார், தொமுச நிர்வாகிகள் வெற்றி, ராஜேந்திரன், அரசு திராவிட ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் முனியப்பன், திமுக நிர்வாகிகள் பாலமுருகன், முனியப்பன், வெங்கடேசன், ஆறுமுகம், பச்சையப்பன், பன்னீர்செல்வம் அன்பழகன், தண்டாலன் ஷானு, வெங்கடேசன் மாதையன், பாலு, விஜய் பாலாஜி யாரப்ஜான், இர்பான், கருணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
