காவிரியில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓகேனக்கலில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது புகைமண்டலமாய் காட்சியளிக்கிறது.
மேட்டூர் அணை நிரம்பி வினாடிக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல், தரமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு காவிரி கரையோர அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை 200 டி.எம்.சி தண்ணீர் கடலுக்கு வீணாக சென்றுள்ளது நேற்று மட்டும் 10டி.எம்.சி தண்ணீர் கடலுக்கு வீணாக சென்றுள்ளது. கடலுக்கு வீணாக செல்லும் உபரி நீரை தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரப்பும் திட்டத்தின் மூலம் மாவட்டம் பயன்பட தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன், என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
