இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ/மாணவிர்களுக்கு ஆண்டொன்றுக்க தலா ரூ.75,000/-வீதமும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்கு ஆண்டொன்றுக்கு தலா ரூ.1,25,000/- வழங்கப்படும்.
தகுதிகள்:
- பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இனங்களை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- அலைபேசி எண்
- ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு
- வருமான சான்று
- சாதிச்சான்று
- ஆதார் அட்டை.
தேர்வு முறை:
தேசிய தேர்வு அமைப்பால் (NATIONAL TESTING AGENCY) கணினி வழியாக(Comuputer Based Test) 11.09.2022 அன்று நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெறும் மாணவ/மாணவியர்கள் அடிப்படையில் தேர்ந்தெருக்கப்படுவர்.
தமிழ்நாட்டினை சேர்ந்த 1547 மாணவர்கள் தேர்வு செய்ய குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டததில் விண்ணப்பிக்க https://yet.nta.ac.gov.in என்ற இணையதளத்தில் 26.08.2022 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் குறைகள் ஏதும் இருப்பின் 27.08.2022 முதல் 31.08.2022 வரை திருத்தம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்களின் அனுமதிச்சீட்டு விவரங்களை 05.09.2022 அன்று முதல் தெரிந்து கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு https://socialjustice.gov.in என்ற இணையதளத்தளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தினை சேர்ந்த தகுதியான அனைத்து மாணவ/மாணவியர்களும் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.அய்யப்பன் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.


