தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற சாலைப்பாதுகாப்பு மாதாந்திர ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவு.
வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள சாலை விதிகளை முழுமையாக பின்பற்றுவதோடு, இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். அதிக வேகம் ஆபத்தை ஏற்படுத்தும் - மிதமான வேகம் பாதுகாப்பான பயணத்திற்கு உதவியாக இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும்.
போக்குவரத்து துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவதோடு, விபத்தில்லா தருமபுரி மாவட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவரமாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு.


