தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் தருமபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிப்பதற்காக கட்டப்பட்டு வரும் மாவட்ட வள மைய கூட்டரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (25.08.2022) நேரில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தருமபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிப்பதற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட வள மையம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
இந்த மாவட்ட வளமைய கூட்டரங்கம் 2605 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது., இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மணிவண்ணன், உதவி பொறியாளர் வா.பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.


