சர்வதேச தடகளப் போட்டி நேபாளம் நாட்டில் நடைபெற்றது இந்த போட்டியில் 19 வயதுக்கான குண்டு எறிதல் போட்டியில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கரகதஹள்ளி ஊராட்சி கடமடையை சேர்ந்த சசிக்குமார் பங்கேற்று முதலிடம் பெற்று தங்க பதக்கம் பெற்று சொந்த கிராமத்திற்கு வருகை புரிந்த போது கரகதஹள்ளி ஊராட்சி கடமடை கிராம ஊர் பொது மக்கள் சார்பாக சிறப்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.ஜி.மாதையன், கே.இ.கிருஷ்ணன். ஆகியோர் முன்னிலை வகித்தனர், மற்றும் சீரஞ்சிவி, சின்னசாமி, சரவணன், கடமடை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், சாந்தி ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மேளதாளத்துடன் வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அனைவரும் தங்க பதக்கம் பெற்ற சி.சசிக்குமார் அவர்களுக்கு பூ மாலை அணிவித்து சால்வை அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


.jpeg)