75 வது சுதந்திர தின விழா பாலக்கோடு ஒன்றியம் ஜெர்த்தலாவ் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திம்மம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பள்ளியில் தலைமையாசிரியர் வரவேற்புரை ஆற்றினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கொ.மாதப்பன் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இந்திய ராணுவ படை வீரர்கள் திரு.கிருஷ்ணன், திரு.மாதையன்,CRPF திரு.மாது, ஆகியோர் பங்கேற்றனர், பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 110 பதக்கங்கள் மற்றும் சிறந்த மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 24 கோப்பைகளை முன்னாள் இந்திய ராணுவ படை வீரர் திரு.மாதையன் அவர்கள் ஏற்பாடு செய்து அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர், திரு.முத்துமணி ஆனந்தன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள் சுய உதவிக்குழு வினர் தன்னார்வலர், ஊர் கவுண்டர் மந்திரி கவுண்டர், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்று சிறப்புத்தினர், முடிவில் தன்னார்வலர் திரு.ராமன் நன்றி கூறினார்.
