Type Here to Get Search Results !

சுடுகாடு கோரி கிராமமக்கள் சாலை மறியல்.

அரூர் அடுத்த மாம்பாடி கிராமத்தில் சுமார் 350 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இதில் பல்வேறு சமுதாய மக்கள் உள்ளடங்கி வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் மரணம் அடைந்தவர்களை இரு சமுதாய பிரிவுகளாக ஆற்றின் இரு கரைகளிலும் அடக்கம் செய்து வந்ததாகவும், தற்போது ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டதால் ஆற்றில் பிணத்தை அடக்கம் செய்ய முடியாமல் நிலையில் தற்போது உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனவே பூதிநத்தம் கிராமத்தில் சுமார் 50 சென்ட் அரசு தரிசு புறம்போக்கு நிலம் உள்ளதால் அந்த நிலத்தை கையகப்படுத்தி எங்களுக்கு சுடுகாடு அமைத்து தரவேண்டுமென பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று நாடு முழுவதும் சிறப்பாக 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்ற நிலையில் நாங்கள் பிணத்தை புதைப்பதற்கு இடம் இல்லாமல் இங்கே தவித்து வருகிறோம் என்று ஆதங்கத்தோடு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காவல்துறையினர் கிராம மக்களிடம் சமாதான பேச்சில் ஈடுபட்டதில் எந்த ஒரு பயனும் இல்லாத நிலையில், வட்டாட்சியர் வரும் வரை எங்கள் சாலை மறியலை தொடர்ந்து நடத்துவோம் என கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சாலை மறியலால் பள்ளி வாகனம் உட்பட ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு உள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies