இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இன்று நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் தண்டுகாரன அள்ளி ஊராட்சி, தொட்டார்தன அள்ளி கிராமத்தை சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளியான திரு.மு.சுரேஷ் என்பவர் தனக்கு மானியத்துடன் வீடு கட்டுவதற்கு உதவிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார். இம்மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலரிடம் அம்மனுவினை வழங்கி, அம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள். இதன்படி இம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திரு.மு.சுரேஷ் என்பவருக்கு நேற்றை தினமே மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் ரூ.2.10 இலட்சம் மானியத்தில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கினார்கள்.
இந்த ஆணையினை பெற்றுக்கொண்ட தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் தண்டுகாரன அள்ளி ஊராட்சி, தொட்டார்தன அள்ளி கிராமத்தை சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளியான திரு.மு.சுரேஷ் என்பவர் நேற்றைய தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மானியத்துடன் வீடு கட்டுவதற்கு உதவிடுமாறு கோரிக்கை மனு வழங்கினேன்.
மனு அளித்த உடனேயே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இன்றைய தினமே எனக்கு ரூ.2.10 இலட்சம் மானியத்தில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கி உள்ளார்கள். மனு அளித்த உடனே எனக்கு ரூ.2.10 இலட்சம் மானியத்தில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும் இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாலஜங்கமன அள்ளி ஊராட்சியைச் சேர்ந்த திருமதி.கொ.சரோஜா என்பவர் பாலஜங்கமன அள்ளி ஊராட்சியில் தூய்மைக் காவலராக பணிபுரிந்து பணியிடையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு மரணமடைந்ததை, தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையினை அவரது கணவர் திரு.தேவராஜ் அவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி.வி.கே.சாந்தி, உதவி ஆணையர் (கலால்) திரு.தனிகாச்சலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஐயப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி.மரியம் ரெஜினா, மாவட்ட மற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.சென்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


