Type Here to Get Search Results !

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி.

தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், அச்சல்வாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி  முதலமைச்சரின் மானாவாரி மேம்பாடு இயக்கம்  விவசாயிகள் பயிற்சி வேளாண்மை அலுவலர் திரு .குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானாவரி சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் உயிர் உரங்கள் பயன்கள், உயிர் பூஞ்ஞான கொல்லியின் பயன்கள் மற்றும் மானிய திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினார்கள். இந்நிகழ்ச்சியில்  அச்சல்வாடி பஞ்சாயத்து தலைவர் திரு கிருபாகரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொறியியல்  துறை உதவி பொறியாளர் திரு வேலுச்சாமி  அவர்கள் கலந்து கொண்டு   பொறியியல் துறை மானிய திட்டங்கள் மற்றும் கோடை உழவு பயன்கள், மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் பற்றியும், தடுப்பு அணை பயன்கள் மற்றும் நீர் மேலாண்மை, சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலி குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் திரு கோபிநாத் உதவி வேளாண்மை அலுவலர் அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் அனைவரும் தங்களது  விளைபொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் கூடுதல்  பயன் அடையலாம் என கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் பற்றி  முன்னோடி விவசாயிகள்  திரு பரணி மற்றும் திரு தயாநிதி  அவர்கள் சாகுபடி அனுபவத்தை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி தோட்டக்கலை அலுவலர் திரு தண்டாயுதம்  அவர்கள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மானிய திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள், மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் திரு செந்தில் குமார் அவர்கள்   கலந்து கொண்டு  உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும்  அதன்  பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு  எடுத்து கூறினார்கள். இந்நிகழ்ச்சியில்  விவசாயிகள் சங்க தலைவர் திருமலை  உட்பட 45 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்  . 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies