தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களின் ஆபத்து குறித்து எடுத்துக் கூறும் வகையில் பென்னாகரம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன் தலைமை தாங்கினார் தமிழாசிரியர் முனியப்பன் வரவேற்றார்.
பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் சிறப்புரை ஆற்றினார் இதில் கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருள்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளையும் பற்றி மாணவரிடம் எடுத்து கூறினார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் வீரன்,மகேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

