தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி.
தர்மபுரி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் இரண்டாவது மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
சிலம்பம் போட்டிகளை தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் காந்தி துவங்கி வைத்தனர்.
சிலம்பம் போட்டிகளில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிலம்பம் கற்றுக் கொண்ட ஐந்து வயது முதல் 15 வயது வரையுள்ள 500க்கும் மேற்பட்ட சிலம்பம் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்றவர்களுக்கு தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் பாராட்டு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க தலைவர் மாது மற்றும் மாவட்ட செயலாளர் ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


