தருமபுரி கோட்டை, அருள்மிகு. கல்யாண காமாக்ஷியம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயிலில் தூய்மைப் பணி.
வரலாற்றுப் பெருமைமிக்க, தமிழகத்தின் முன்னணி கோயிலான, "நுளம்ப பல்லவர்கள்" கால கட்டிட கோயிலான தருமபுரி கோட்டை, அருள்மிகு. கல்யாண காமாக்ஷியம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயிலில், (28.08.22/ஞாயிறு) காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை ஆலால சுந்தரர் இறைபணி பேரவை மற்றும் தகடூர் இளைஞர் சங்கமம் அமைப்பின் சார்பில் திருக்கோயிலில் தொடர்ந்து நான்காவது வாரமாக தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில் புகழ்வேல், கபிலன், அண்ணாதுரை, குணா, இராஜசிற்பி, தகடூர் பிறைசூடன், விஜயசங்கர், இராஜசேகர்,வினோதா, தங்கமணி, மற்றும் இராஜ்குமார் ஆகியோர் பங்குகொண்டனர்.
திருக்கோயிலில் தூய்மைப் பணி மேற்கொண்டோரை திருக்கோயில் சிவாச்சாரியார்கள் பாராட்டினர்.


