பென்னாகரம் ஒன்றியம், பிக்கிலி ஊராட்சி பூதிநத்தம் முதல் செக்கிலிநத்தம் வரை உள்ள 4 கி.மீ தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வேலைகளுக்காக பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பதினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் விளையும் காய்கறி, பழங்கள், கரும்பு, நெல் உணவு பொருட்களை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமங்களை சந்தித்துவருவது வாடிக்கையாகிவிட்டது, அவசர மருத்துவ வாகனங்கள் செல்லுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் கிராம பொதுமக்கள் பலமுறை புகார் மனுக்களை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


