நேற்று மகா சங்கடஹர சதுர்த்தி தினம். எனவே அதனை முன்னிட்டு ஏரியூர் அருகே உள்ள இராம கொண்ட அள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி அக்குமாரியம்மன் ஆலயத்தில், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அந்த ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதிக்கு, கோ பூஜை, யாக பூஜை மற்றும் 16 வகை அபிஷேகங்களுடன் மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு தொடங்கிய பூஜை இரவு 9 மணி வரை நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் நடைபெற்றது, இந்த பூஜையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி மாதையன் சுவாமிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


