மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் நிகழ்விற்கு தலைமை வகித்தார், கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.எழிலன் முன்னிலையுரை வழங்கினார்.
கல்லூரியின் நிர்வாக மேலாளர் ரா கணேஷ், அறிவியல் பிரிவின் துணை முதல்வர் முனைவர் சி.தமிழரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பெரியார் பல்கலைக் கழகத்தின் தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பழனி வேலு, பல்கலைக் கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் அப்துல் காதர், முனைவர் திருமதி வசந்தி உள்ளிட்டோர் மாணவர்கள் தொழில் முனைவோருக்கான சிந்தனை தலைப்பில் பேசினர்.
நிறைவாக கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியர் மா.பாலாஜீ நன்றி கூறினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்வில் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
