நானூறு நாட்களை கடந்ததும் தினந்தோறும் 100 நபர்களுக்கு தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு மதிய உணவாக வழங்கி வருகின்றனர். இந்த திட்டம் மக்களின் பேராதரவோடு 500வதுநாட்களை கடந்து செல்கிறது.
இது குறித்து மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் திரு சதிஷ் கூறும்போது, மை தருமபுரி அமைப்பின் செயல்பாடுகள் இருக்கும் வரை இங்கு யாரும் அனாதைகள் இல்லை, நாங்கள் அவர்களுக்கு உறவாக இருக்கிறோம், அதேப்போல் பசியால் இருப்பவர்களுக்கு எங்களால் ஒரு வேளை உணவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மிக உறுதுணையாக இருந்து வரும் தமிழ்செல்வன், அருள்மணி, அருணாச்சலம், மொஹம்மத் ஜாபர், யோகேஷ், ஸ்ரீராம், தினேஷ் ஆகியோர் உணவை சரியான நேரத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மை தருமபுரி குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம், மேலும் உங்கள் வீடு விசேஷங்களில் எங்களுடன்இணைந்து ஏழைகளின் பாசியாற்ற 8667229134 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் என அவர் தெரிவித்தார்.
