தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பசுவாபுரம் ஊராட்சி அம்பாளப்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள இடுகாட்டில் உடல் தகனம் செய்யும் இடங்கள் முட்புதர்களால் அடர்ந்து கிடக்கின்றன, இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் இதை கண்டு கொள்ளவில்லை, மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை மக்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியில் உள்ளாகின்றனர், மேலும் இடுகாடு செல்லும் சாலையும் மிக மோசமாக உள்ளது, இதனால் ஒவ்வொரு முறையும் உடலை புதைக்க கொண்டுவரும்போது பாதை சரியில்லாத காரணத்தால் சாலையிலே பிரேதத்துடன் காத்துக் காத்துக்கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது, எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தகடூர் குரல் செய்திகளுக்க பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் எஸ். நந்தகுமார்.