நாட்டின் 75வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீவித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் சார்பாக மாபெரும் பேரணி நடைப்பெற்றது.
இதில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் காந்திஜி, நேதாஜி, நேரு, படேல், பாரதியார், பாரத மாதா, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட தலைவர்களின் வேடமணிந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்தே மாதரம் கோஷமிட்டு ஊர்வலமாக சென்று காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த பேரணியில் வணிகர் சங்க நிர்வாகிகள், மருத்துவர் பாலகிருஷ்னன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.