தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பசுவபுரம் ஊராட்சியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பழனியம்மாள் அவர்களும் ஊராட்சி மன்ற எழுத்தாளர் பட்டாபிதுரை, விவசாயத் துறையை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வேளாண்மை அலுவலர், கால்நடை மருத்துவர்,வார்டு உறுப்பினர்கள், செவிலியர்கள், மகளிர் சுய உதவிக் குழு தலைவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள், நியாயவிலைக் கடை ஊழியர், மக்கள் நலப்பணியாளர், தாசரஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
இதில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .


