தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 75வது சுதந்திர தின பவளவிழாவினை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் கொண்டாடப்பட்டது, அதனையொட்டி பேரூராட்சியில் சுதந்திர கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார், பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக பேரூராட்சியின் முன்பு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.


