தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தில் கிறுஸ்தவ பங்கு இளைஞர், இளம் பெண்கள் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் முகாம் நடத்தினர் இதில் ஏராளமான இளைஞர்களும் இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் மற்றும் கண்தானம் செய்தனர்.
பொம்மிடி புனித அந்தோனியார் ஆலயத்தில் தமிழக கத்தோலிக்க கிறிஸ்துவ இளைஞர்கள் இயக்கம் சார்பில் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை ஆலய பங்கு தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ் துவக்கி வைத்தார், பங்கு குழு தலைவர் எம் .எஃப், ரமேஷ், பொருளாளர் அந்தோணி, செயலாளர் ஜோ, லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இளம் பெண்களும் வாலிபர்களும் ரத்ததானம் 56 பேரும், கண் தானம் 70 பேரும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொம்மிடி கிறிஸ்துவ மக்கள் செய்திருந்தனர்


