இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நல்லம்பள்ளி வட்டார குழு கூட்டம் இன்று 21-8-2022 தருமபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார குழு உறுப்பினர்சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் மறியலில் பங்கேற்பது குறித்து பேசினார்.
கூட்டத்தில் 30-8-2022 அன்று மத்திய அரசின் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் அரிசி மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியை திரும்ப பெறக் கோரி தருமபுரி தலைமை அலுவலகம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் நல்லம்பள்ளி பகுதியில் இருந்து திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்தேவராசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, மாதேஷ்வரன் வட்டார செயலாளர்பிரசாத் ஆகியோர் பேசினர். வட்டார துணை செயலாளர் பொன்னியப்பன்,சிவன் நவீன்குமார், சண்முகம், மாதையன், ரஜினி, மாரியப்பன், பழனிச்சாமி, மணி, வீரபத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


